ADVERTISEMENT

UAE: பொது மக்களுடன் ஒன்றிணைந்து ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட துபாய் இளவரசர்..!!

Published: 26 Nov 2021, 4:24 PM |
Updated: 26 Nov 2021, 4:26 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதமாக துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அவர்களால் தொடங்கப்பட்ட துபாய் பிட்னெஸ் சேலஞ்சின் ஒரு பகுதியாக நடத்தப்படும் மாபெரும் ஓட்ட பந்தயமான “துபாய் ரன்” நவம்பர் 26 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துபாயின் இளவரசரான ஷேக் ஹம்தான் பொது மக்களுடன ஒன்றிணைந்து நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2019 ம் ஆண்டு துபாயின் மிகவும் பிஸியான உலக புகழ்பெற்ற ஷேக் சையத் சாலையில் நடைபெற்ற துபாய் ரன் ஓட்ட பந்தயத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதை போன்று இந்த வருடமும் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர்.

இது பற்றி வெள்ளிக்கிழமை அதிகாலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஷேக் ஹம்தான் துபாய் ரன்னில் மக்களுடன் சேர்ந்து பங்கேற்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

இதில் 5 கிமீ பாதை குறிப்பாக குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 10 கிமீ பாதை பொழுதுபோக்கு மற்றும் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

துபாய் ரன் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மேற்கூறப்பட்ட ஓட்ட பாதையின் வழியாக செல்லும்போது துபாய் மியூசியம், எமிரேட்ஸ் டவர்ஸ், டவுன்டவுன் துபாய், துபாய் மால், புர்ஜ் கலீஃபா மற்றும் ஷேக் முஹம்மது பின் ரஷித் பவுல்வார்டு ஆகிய துபாயின் புகழ்பெற்ற அடையாள சின்னங்களை காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.