ADVERTISEMENT

அமீரகத்தின் 50 ஆண்டு கால வெற்றி பயணத்தில் வெளிநாட்டவரின் பங்கு மிக முக்கியம்..!! ஷேக் முகம்மது நெகிழ்ச்சி..!!

Published: 1 Dec 2021, 4:46 PM |
Updated: 2 Dec 2021, 4:04 AM |
Posted By: admin

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரகத்தின் ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், அமீரகம் கோலாகலமாக பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வரும் வேளையில் இத்தகைய ஐக்கிய அரபு அமீரக வளர்ச்சிக்கு வெளிநாட்டவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து சமூக ஊடகங்களில் தேசத்திற்கு ஒரு உரையை வெளியிட்டபோது, நாடுகள் தங்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் சொந்த குடிமக்கள் மற்றும் வளங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது என கூறிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதை எடுத்துரைத்துள்ளார்.

மேலும், “அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவுவதற்காக வெளிநாட்டவர்கள் தங்களின் ஆற்றல், திறமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை செயல்படுத்த அமீரகத்திற்கு வர விரும்பினால் அவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில் “ஒற்றுமை நமது வலிமையின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது” என்றார்.

ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மரியாதை செலுத்திய அவர், அவர்களின் பாதுகாப்பு சேவைகள் கடந்த 50 ஆண்டுகளாக நாட்டைப் பாதுகாத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அது தொடரும் என்றும் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து “ஐக்கிய அரபு அமீரகம் எப்போதும் போல, பிராந்தியத்திலும் உலகிலும் நல்லெண்ணம், அமைதி, முன்னேற்றம் மற்றும் சகோதரத்துவத்தின் கலங்கரை விளக்கமாக உள்ளது,” என்று ஷேக் முகமது கூறினார். 

அத்துடன் “இறைவனின் ஆசியுடனும், நமது மக்களின் மன  உறுதியுடனும், அமீரகத்தில் இருக்கும் நம் எதிர்காலம் தொடர்ந்து பிரகாசிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.