ADVERTISEMENT

அமீரகவாசிகளே… துபாயை சுற்ற ஆசையா.. ஒரு திர்ஹம் இருந்தால் போதும்.. ஒரு நாள் முழுக்க பைக்கில் சுற்றலாம்…

Published: 22 Dec 2021, 7:49 AM |
Updated: 15 Jan 2022, 10:28 PM |
Posted By: admin

அமீரகவாசிகள் ஒரு திர்ஹம் மட்டும் செலுத்தி ஒரு நாள் முழுவதும் பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களுக்கு கரீம் பைக்குகளை (careem bike) ஒரு நாள் முழுவதும் ஒரு திர்ஹம் மட்டும் செலுத்தி வாடகைக்கு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இந்த பைக்குகளை ஒரு நாள் வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் ஒரு நபர் 20 திர்ஹம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, இந்த சேவைக்கு இதுவரை ஒரு மில்லியன் பயணங்கள் பதிவு செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக கூறியுள்ளது.

ADVERTISEMENT

RTA மற்றும் கரீம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த சேவையினை வழங்கவிருக்கின்றன.

இந்த சேவை குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனுபவிக்க ஊக்குவிக்கிறது.

ADVERTISEMENT

துபாய் மெரினா, ஜுமேரா கடற்கரை சாலை, ஜுமேரா லேக் டவர்ஸ், தி கிரீன்ஸ், பர்ஷா ஹைட்ஸ், துபாய் வாட்டர் கால்வாய், துபாய் மீடியா சிட்டி, டவுன்டவுன் துபாய், அல் குத்ரா, அல் கராமா மற்றும் அல் மன்கூல் போன்ற நகரத்தின் பரபரப்பான பகுதிகளில் இந்த சேவை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.