அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ராஃபிள் டிராவானது முதல் முறையாக டிசம்பர் மாதம் வாராந்திர டிராவை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு வாரமும் வெல்பவருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வழங்கி வருகிறது.
இந்த வாராந்திர டிராவில் இரு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்பொழுது மூன்றாவது டிரா நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வென்ற இந்தியாவைச் சேர்ந்த பிஜேஷ் போஸ் என்பவருக்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
வெற்றி பெற்ற ஷார்ஜாவைச் சேர்ந்த பிஜேஷ் போஸ் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள், இன்று நான் பிக் டிக்கெட் மூலம் 1 மில்லியன் திர்ஹம் வென்றுள்ளேன். எனது இரண்டு புதிய குழந்தைகளும் எனது வாழ்க்கையில் கூடுதல் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாக நான் நம்புகிறேன், அதுவே இன்று எனது வெற்றிக்குக் காரணம்,” என்று பிக் டிக்கெட் தொகுப்பாளர் பௌச்ராவிடம் இருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்ற போஸ், வாராந்திர திர்ஹம் 1 மில்லியன் எலக்ட்ரானிக் டிராவை வென்றதைப் பற்றி அவரிடம் கூறியுள்ளார்.
குடியிருப்பாளர்கள் இந்த பிக் டிக்கெட்டுகளை டிசம்பர் மாத இறுதி வரை வாங்கலாம் மற்றும் அவர்களுக்கு ஜனவரி 1 அன்று நடக்கும் எலக்ட்ரானிக் டிராவில் 1 மில்லியன் திர்ஹம் மற்றும் ஜனவரி 3 அன்று 25 மில்லியன் திர்ஹம் முதல் பரிசாகவும், 2 மில்லியன் திர்ஹம் இரண்டாம் பரிசாகவும் மற்றும் மற்ற நான்கு ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.