ADVERTISEMENT

துபாய்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் 3,000 திர்ஹம்ஸ் அபராதம்..!! பேரிடர் மேலாண்மை குழு தகவல்..!!

Published: 28 Dec 2021, 3:53 PM |
Updated: 28 Dec 2021, 3:54 PM |
Posted By: admin

புதிய ஆண்டான 2022 ம் வருடம் தொடங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், துபாயில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கும் போது பொதுமக்கள் முகக்கவசம் அணியத் தவறினால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் உயர்ந்துகொண்டே வரும் கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்டு தொற்றுநோய் மேற்கொண்டு பரவாமல் தடுக்க துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவால் புதுப்பிக்கப்பட்ட கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துபாய் முழுவதிலும் 29 இடங்களில் வாணவேடிக்கைகள் நடைபெறும் என்றும், இந்த வாணவேடிக்கை கொண்டாட்டங்கள் மிகுந்த பாதுகாப்புடனும் சமூக இடைவெளியுடனும் நடைபெறும் என்றும் பேரிடர் மேலாண்மைக் குழு கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை குறித்து துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழுவின் தலைவர் ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தெரிவிக்கையில், “அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான துபாய் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று அமீரகத்தின் மற்ற எமிரேட்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த எமிரேட்டை சார்ந்த அதிகாரிகள் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT