ADVERTISEMENT

UAE: அரசு நிறுவன ஊழியர்கள் பூஸ்டர் டோஸ் போட்டிருப்பது கட்டாயம்..!! அபுதாபி வெளியிட்ட அறிவிப்பு…!!

Published: 5 Jan 2022, 5:30 PM |
Updated: 5 Jan 2022, 5:35 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் பணியிடத்திற்குள் நுழைவதற்கு கொரோனாவிற்கான இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸினை போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள அரசாங்க ஆதரவுத் துறை, அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவானது ஜனவரி 10 திங்கள் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரப்பூர்வ மருத்துவ விலக்கு பெற்ற ஊழியர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய நடைமுறையானது அரசு நிறுவனங்களில் ஏற்கனவே உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும், பொது சுகாதாரத்தை மேலும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன் ஊழியர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் எதிர்மறையான PCR சோதனை முடிவை வழங்குவது உட்பட, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசு நிறுவனங்களுக்கு வரும் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸினைப் பெறத் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.