ADVERTISEMENT

ஷார்ஜா விமான நிலையத்தில் PCR சேவை நிறுத்தப்படும்..!! சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை..!!

Published: 6 Jan 2022, 4:32 PM |
Updated: 6 Jan 2022, 4:33 PM |
Posted By: admin

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான சமூக இடைவெளியை கடைபிடிக்கும் உறுதிப்பாட்டிற்கு இணங்க, ஷார்ஜா விமான நிலைய மருத்துவ மையத்தில் இயங்கி வரும் கோவிட்-19 PCR சோதனை மையம் அதன் முழு திறனை எட்டியவுடன் நிறுத்தப்படும் என்று ஷார்ஜா விமான நிலையம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் உயர்ந்து வருவதால் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வழக்கமான நேரத்திற்கு மாற்றாக மருத்துவ மையத்தின் PCR சோதனை மேற்கொள்ளும் முழு திறனை அடைந்தவுடன் மேற்கொண்டு PCR சோதனைகள் மேற்கொள்ளப்படாது என ஷார்ஜா விமான நிலையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் ஷார்ஜா விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கான கொரோனா PCR சோதனைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு குறித்து விமான நிலையம் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “விமான நிலைய ஊழியர்கள் மற்றும் ஷார்ஜா விமான நிலையம் வழியாக பயணம் செய்யும் பயணிகளைத் தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உடல் ரீதியான சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக அதிகபட்ச திறனை எட்டியவுடன் ஷார்ஜா விமான நிலைய மருத்துவ மையம் COVID-19 PCR சோதனை சேவைகளை வழங்குவதை நிறுத்தும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஷார்ஜா விமான நிலைய மருத்துவ மையத்தில் கொரோனா PCR சோதனை, பயனாளர்களுக்கு பாஸ்ட் டிரேக் PCR சோதனை மற்றும் வழக்கமான PCR சோதனை என இரண்டு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிவிப்புக்கு முன்னர் வரையிலும் பாஸ்ட் டிரேக் PCR சோதனை வாரத்தில் 7 நாட்களும் காலை 08:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01:00 மணி வரையிலும், அதே போன்று வழக்கமான PCR வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT