ADVERTISEMENT

UAE: ஆப்பிள் ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடல்…!! கொரோனா தடுப்பு நடவடிக்கை என தகவல்…!!

Published: 10 Jan 2022, 1:41 PM |
Updated: 10 Jan 2022, 1:49 PM |
Posted By: admin

அமீரகத்தில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் துபாயில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஸ்டோர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் யாஸ் மால் ஆகிய மூன்று மால்களில் விற்பனை நிலையங்களை இயக்குகிறது.

இதில் அபுதாபியில் உள்ள யாஸ் மாலில் உள்ள விற்பனை நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வரும் என்றும் துபாயில் இருக்கும் இரண்டு விற்பனை நிலையங்கள் மட்டும் ஜனவரி 13 வியாழன் வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“துபாயில் உள்ள எங்கள் ஸ்டோர்கள் ஜனவரி 13 வரை தற்காலிகமாக மூடப்படும். அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான எச்சரிக்கையுடன் இந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும் எங்கள் குழுக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை விரைவில் திரும்பப் பெறுவதை எதிர்நோக்குகிறோம்” என்று ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் கடந்த டிசம்பர் 27, 2021 அன்று, அதன் ஐஃபோன் நிறுவன ஊழியர்களிடையே கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக சுமார் 20 ஆப்பிள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகவும் சில விற்பனை நிலையங்கள் தொற்றுநோயிலிருந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT