ADVERTISEMENT

வீடியோ: துபாயில் மற்றுமொரு புதிய அடையாளமான ‘Infinity bridge’.. புகைப்படங்களை பகிர்ந்த துபாய் மன்னர்…

Published: 13 Jan 2022, 3:37 PM |
Updated: 14 Jan 2022, 4:22 PM |
Posted By: admin

நவீனமாகவும் தனித்துவமாகவும் கட்டிடங்களைக் கொண்டிருக்கும் துபாயில் தற்பொழுது அதில் புதியதாக பாலம் ஒன்று இணைந்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இன்ஃபினிட்டி பிரிட்ஜ் என பெயரிடப்பட்டிருக்கும் புதிய பாலத்தின் சில அற்புதமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது தற்பொழுது பயன்பாட்டிற்காக ஜனவரி 16 அன்று திறக்கப்படவுள்ளது.

இது பற்றி அவர் கூறுகையில், “இது ஒரு புதிய உலகளாவிய பொறியியல், கலை மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் தலைசிறந்த படைப்பு. எங்கள் பாலங்கள் எதிர்காலத்தை நோக்கி செல்கின்றன. எங்கள் லட்சியங்கள் முடிவற்றவை, ”என்று ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த பாலம் கட்டுவது தொடர்பாக முதன்முதலில் 2018 இல் அறிவிக்கப்பட்டது. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தின்படி, இந்த பாலம் துபாய் கிரீக்கின் குறுக்கே செல்வதாக கூறப்பட்டுள்ளது.

இது 300 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டது மற்றும் இரு திசைகளிலும் 24,000 வாகனங்கள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

“இது கிரீக்கிற்கு 15 மீட்டர் உயரத்தில் இருக்கிறது மற்றும் பெரிய படகுகளுக்கு 24 மணி நேரமும் எவ்வித சிரம மும் இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது” என்று RTA கூறியுள்ளது.

ஷேக் ரஷீத் ஸ்ட்ரீட் மற்றும் அல் மினா, அல் கலீஜ் மற்றும் கைரோ சாலைகள் வழியாக 13 கிமீ நீளம் கொண்ட 5 பில்லியன் திர்ஹம் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஷிண்டாகா காரிடார் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.