கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான சோதனையில் நேர்மறை முடிவை பெற்றவர்கள் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை அபுதாபி அரசு புதுப்பித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கைகள் சுகாதாரத் துறை மற்றும் அபுதாபி பொது சுகாதார மையத்துடன் இணைந்து அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவால் “பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான” முயற்சிகளுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா சோதனையில் நேர்மறை முடிவை பெற்றவர்களுக்கான விதிமுறைகள்
>> புதிய நடைமுறைகளின் கீழ், அதிக ஆபத்துள்ள வகைககளாக பிரிக்கப்பட்டுள்ள 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், தீவிரமான அறிகுறிகளைக் கொண்டவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களின் உடல்நிலையை மதிப்பீடு செய்வதற்கும், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் நியமிக்கப்பட்ட கோவிட்-19 முதன்மை மதிப்பீட்டு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
>> தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிப்பதற்கு, அவர்கள் 24 மணிநேர இடைவெளியில் இரண்டு எதிர்மறையான PCR முடிவுகளைப் பெற வேண்டும் அல்லது 8 மற்றும் 10 ஆம் நாள் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மருத்துவ மதிப்பீட்டைத் தொடர்ந்து தனிமைப்படுத்தலின் இறுதி மூன்று நாட்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
>> அதேபோன்று லேசான அல்லது மிதமான அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படாதவர்களுக்கான நடைமுறைகளையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அமீரகத்தில் உள்ள எந்தவொரு சுகாதார நிலையத்திலும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சோதனை நேர்மறையாக இருந்தால், சுகாதாரத்துறை நிபுணரால் அவர் தொடர்பு கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தும் நடைமுறைகள் தெரிவிக்கப்படும்.
>> மேற்கண்ட வகைகளில் உள்ள நோயாளிகள் தனிமைப்படுத்தலை முடிக்க 24 மணி நேரத்திற்குள் இரண்டு எதிர்மறை PCR சோதனைகளைப் பெற வேண்டும். தனிமைப்படுத்தல் முடிந்து வழக்கமான செயல்களை தொடங்கினாலும் அவர்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும்.
வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான விதிமுறைகள்
>> கோவிட்-19 சோதனையில் நேர்மறை முடிவை பெற்றவர்கள் போன்று கொரோனா நோயாளிகளின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கான நெறிமுறைகளையும் அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்.
>> நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பப்படும். அதில் அவர்கள் ஒரு PCR பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படும். மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தல் திட்டத்தில் சுயமாக பதிவு செய்யவும் கூறப்படும்.
>> முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
>> அறிவுறுத்தப்பட்ட PCR சோதனையில் நேர்மறை முடிவை பதிவு செய்பவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அதே நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
>> எதிர்மறை சோதனை முடிவை பெற்றவர்கள் கூடுதல் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதாவது தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஆறாவது நாள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒன்பதாம் நாள் என இரண்டாவது PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
>> இரண்டாவது PCR சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் கோவிட்-19 பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க தங்களின் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்து கொள்ளலாம்.
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 14, 2022