ADVERTISEMENT

UAE: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டதாக தூதரகம் தகவல்…!!

Published: 18 Jan 2022, 2:51 PM |
Updated: 18 Jan 2022, 3:05 PM |
Posted By: admin

அபுதாபி ஹவுதி பயங்கரவாத தாக்குதலினால் ஏற்பட்ட எரிபொருள் டேங்கர் வெடிப்பால் கொல்லப்பட்ட இரண்டு இந்தியர்களின் அடையாளங்கள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “தூதரக அதிகாரிகள் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளனர். Adnoc உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இணைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவிலேயே திருப்பி அனுப்புவதற்காக தொடர்பில் இருந்து வருகிறது” என தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த ஆறு பேரில் இருவர் இந்தியர்கள் என்றும், அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.

அபுதாபியின் முஸாஃபா பகுதியில் உள்ள அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் (Adnoc) மூன்று பெட்ரோலிய டேங்கர்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 இந்தியர் ஒரு பாகிஸ்தானியர் என மூவர் உயிரிழந்தனர். Adnoc தனது மூன்று ஊழியர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை 10 மணியளவில் முஸாஃபா எரிபொருள் கிடங்கில் இந்த சம்பவம் நடந்ததாக Adnoc தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “இந்த நேரத்தில், முழு அட்நாக் குடும்பமும் இறந்த எங்கள் சக ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது. சரியான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், விரிவான விசாரணை தொடங்கியுள்ளது” என்று Adnoc ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT