ADVERTISEMENT

துபாய்: 24×7 என முழுநேரமும் இயங்கும் மூன்று புதிய டிரைவ்-த்ரூ சோதனை மையங்கள் திறப்பு…!!

Published: 21 Jan 2022, 7:36 AM |
Updated: 21 Jan 2022, 9:40 AM |
Posted By: admin

அமீரகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கொரோனா பரிசோதனைகளுக்கான தேவையும் அதகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும், கொரோனா பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும், துபாய் சுகாதார ஆணையம் (DHA) unilabs-உடன் இணைந்து மூன்று புதிய டிரைவ்-த்ரூ ஸ்கிரீனிங் மையங்களை திறந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய மையங்கள் அல் மன்கூல், நாத் அல் ஷெபா, நாத் அல் ஹம்மர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு மையமும் ஒரு நாளைக்கு 1,500 சோதனைகளை நடத்தும் திறன் கொண்டது. அதேபோல் மையங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். 

அல் லுசைலியில் புதிய ஸ்க்ரீனிங் ஹால் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா சோதனைகளை நடத்த துபாய் முழுவதும் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஸ்கிரீனிங் மையங்கள் உள்ளன.

ADVERTISEMENT

அல் லுசைலி ஹாலில் சோதனையானது அப்பாய்மெண்ட் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும். சோதனைகளுக்கான அப்பாய்மெண்ட்டை பதிவு செய்ய சமூக உறுப்பினர்கள் DHA அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.