ADVERTISEMENT

UAE: மோசமான வானிலை காரணமாக குளோபல் வில்லேஜ் தற்காலிகமாக மூடல்…!!

Published: 21 Jan 2022, 5:10 PM |
Updated: 21 Jan 2022, 5:11 PM |
Posted By: admin

அமீரகத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக குளோபல் வில்லேஜ் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிக வேகத்துடன் காற்று வீசுவதால் தேசிய வானிலை ஆய்வு மையத்துடன் (NCM) ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகம் ட்வீட் செய்துள்ளது. இந்த நடவடிக்கை பார்வையாளர்கள் மற்றும் குழுக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நாளை சனிக்கிழமை, ஜனவரி 22, மாலை 4 மணி முதல் பார்வையாளர்களை வரவேற்க மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 10 அடி உயரத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டது. அத்துடன் நாடு முழுவதும் தூசி புயலுக்கான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.