ADVERTISEMENT

துபாய் சாலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள புதிய ரேடார்..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

Published: 22 Jan 2022, 10:46 AM |
Updated: 22 Jan 2022, 1:00 PM |
Posted By: admin

துபாயில் பாதசாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வாகனத்தை ஒட்டி செல்லும் ஓட்டுநர்களைப் பிடிக்க துபாய் காவல்துறை புதிய ரேடார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. துபாய் போக்குவரத்து துறையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ரேடார் மூலம் சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள் அல்லது வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் கண்டறிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

துபாய் உலக வர்த்தக மையத்தில் நடந்த INTERSEC 2022 இன் 23வது எடிசனில் பங்கேற்ற போது துபாய் காவல்துறையின் மேடையில் இந்த ரேடார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. துபாய் காவல்துறையின் கூற்றுப்படி, ரேடார் சூரிய சக்தியில் இயங்கும் இந்த ரேடாரில் பாதசாரிகள் சாலைகளைக் கடக்கும்போது அதனை அடையாளம் காண சென்சார்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேடாரில் பாதசாரிகளுக்கு நிற்காத வாகனத்தைப் பதிவு செய்யும் அம்சத்துடன் பாதசாரிகள் கடக்கும் பாதைகளில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் நிறுத்துவதற்கும் ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் சிவப்பு விளக்கு ஒன்றும் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த ரேடாரில் சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் அதனை புறக்கணித்தால், ரேடார் அந்த வாகனத்தை பதிவு செய்யும். பின்னர் தவறு செய்த அந்த வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புதிய ரேடாரின் மாதிரி தோற்றம்

இது தவிர வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் அல்லது வேறு எந்த வகையிலும் கவனத்தை சிதறடிக்கும் ஓட்டுநர்களையும் இந்த ரேடார் மூலம் கண்டறிய முடியும். அதே போன்று வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாத ஓட்டுனர்களையும் இதில் உள்ள தொழில்நுட்பம் மூலம் கண்டறிய முடியும்.

துபாய் காவல்துறை பாதசாரிகளுக்கு போக்குவரத்து பாதுகாப்பை அதிகரிக்கவும், எமிரேட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற டிரைவர்களை ஊக்குவிக்கவும் இந்த ரேடாரை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து சட்டங்களின்படி, அத்தகைய குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்ட்ஸ் தண்டனையாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT