ADVERTISEMENT

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல்…!! அதிகாரிகள் விசாரணை…!!

Published: 26 Jan 2022, 3:34 PM |
Updated: 26 Jan 2022, 3:37 PM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தங்கத்தைக் கடத்தி வரும் நபர்கள் அவ்வப்போது அதிகாரிகளால் பிடிபட்டுக் கொண்டே வருகின்றனர். இருந்தபோதும் தங்கக்கடத்தலானது தொடர்கதையாகிக் கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை சர்வதேச சரக்குப்பிரிவு விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற மத்திய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டதில் முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அதில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிரோ தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இது சம்பந்தமாக தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதே போன்று பயணிகள் விமானங்களிலும் தங்களது உடைகளிலும் உடைமைகளிலும் தங்கக்கட்டிகளை கடத்தி வரும் பலரையும் அதிகாரிகள் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT