ADVERTISEMENT

அமீரகத்தை குறிவைத்து அனுப்பிய ஏவுகணையின் ஏவுதளம் அழிப்பு… வீடியோவை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்..!!

Published: 31 Jan 2022, 8:44 AM |
Updated: 31 Jan 2022, 8:52 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை அதிகாலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து ஏவுகணை அனுப்பப்பட்டதையடுத்து அதனை இடைமறித்து அழித்ததுடன் ஏவுகணை அனுப்பப்பட்ட ஏவுதளத்தையும் அழித்ததாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏமனில் உள்ள அல் ஜாஃப் என்ற இடத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணை (ballistic missile) ஏவுவதற்கான தளம் நள்ளிரவு 12.50 மணியளவில் அழிக்கப்பட்டதாக அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. அதனுடன் ஏவுதளம் அழிக்கப்பட்டதன் காணொளியையும் அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

அமீரகத்தில் இன்று நள்ளிரவு 12.20 மணியளவில் ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகம் வான் பாதுகாப்பு படை மூலம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததை அடுத்து அதன் ஏவுதளமும் அழிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இதுவாகும். அபுதாபியில் நடந்த முதல் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதில் இருவர் இந்தியர்கள் ஆவர். இரண்டாவது தாக்குதல் முயற்சியானது ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு படைகளால் முறியடிக்கப்பட்டது.

ADVERTISEMENT