கொரோனா பாதிப்பானது பெரும்பாலான நாடுகளில் பரவலாக குறைந்து வரும் பட்சத்தில் பல்வேறு நாடுகள் தாங்கள் கொரோனாவிற்காக விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அதில் ஒரு நாடாக குவைத்தில் கொரோனா பாதிப்பிற்காக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தடுப்பூசி போடாதவர்களும் குவைத் வர அனுமதி, முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு PCR சோதனையில் இருந்து விலக்கு, தடுப்பூசி போடாத நபர்களுக்கு பொது இடங்களில் அனுமதி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்
பயணம் தொடர்பான தளர்வுகள்
>> பிப்ரவரி 20 முதல் குவைத் அரசு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஒன்றை முழுமையாக போட்டவர்கள் குவைத் பயணிக்க விரும்பினால் பயணத்திற்கு முந்தைய மற்றும் வருகையின் போது PCR சோதனை மேற்கொள்ள தேவையில்லை.
>> தடுப்பூசி போடாத நபர்கள் குவைத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பயணிக்க அனுமதி. ஆனால் அவர்கள் திரும்பி வரும் பொழுது PCR சோதனை தேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
>> முழுமையாக தடுப்பூசி போடாத நபர்கள் குவைத் பயணிக்கவிருந்தால் பயணத்திற்கு முன் 72 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் எதிர்மறை முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.
> குவைத் அங்கீகரித்த தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசியின் மூன்று டோஸை போட்டுக்கொண்டவர்கள், இரண்டு டோஸை போட்டுக்கொண்டு ஒன்பது மாதம் நிறைவடையாதவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமாகி மூன்று மாதம் நிறைவடையாதவர்கள் ஆகியோர் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் என எடுத்துக்கொள்ளப்படும்.
பொது இடங்களுக்கான தளர்வுகள்
>> வழக்கமான ஐவேளை தொழுகைகள் மசூதிகளில் சமூக இடைவெளியின்றி நடத்த அனுமதி
>> அனைத்து வணிக வளாகங்களிலும் நுழைய தடுப்பூசி போடாதவர்களுக்கும் அனுமதி
>> பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் PCR சோதனை எடுக்க வேண்டிய கட்டாயமில்லை.
>> மார்ச் 13 முதல் அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் முழுதிறனில் செயல்பட அனுமதி
>> சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால் அனைத்து உட்புற மற்றும் வெளிப்புற சமூக நிகழ்வுகளுக்கும் அனுமதி
மேற்கண்ட தளர்வுகள் குவைத் அரசால் அறிவிக்கப்பட்டபோதும் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.