ADVERTISEMENT

சவூதியை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல்…!! 12 பேர் காயம்..!!

Published: 22 Feb 2022, 5:13 PM |
Updated: 22 Feb 2022, 5:17 PM |
Posted By: admin

சவூதி அரேபியா மீது ஹவுதி போராளிகள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 நபர்கள் காயமடைந்ததாக நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏமனில் இருந்து வெடிபொருட்களை ஏற்றி அனுப்பப்பட்ட ட்ரோன் சவுதியின் ஜிசான் நகரில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்து தாக்கியது.

ஏமனின் சனா விமான நிலையத்தில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஆளில்லா விமானத்தை இடைமறித்து அழித்தத்தைத் தொடர்ந்து இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

காயமடைந்தவர்களில் மூன்று பயணிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலையத்தின் உள்ளே தரை முழுவதும் கண்ணாடி உடைந்ததைக் காட்டும் ஒரு சிறிய வீடியோ கிளிப்பையும் அது ஒளிபரப்பியது.

இந்த சம்பவத்தையடுத்து சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பொதுமக்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை சவூதி மேற்கொள்ளும் என்று சவூதி பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

அத்துடன் சவூதி அரேபியா ஒரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகவும், பொதுமக்களை குறிவைத்து நடத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு அரபு நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போன்று சமீபத்தில் அபா விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலை சவுதி தலைமையிலான கூட்டுப்படை அழித்ததில் 12 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.