ADVERTISEMENT

AR ரஹ்மான், அனிருத்தை தொடர்ந்து எக்ஸ்போவிற்கு வரும் இசைஞானி இளையராஜா…!!

Published: 23 Feb 2022, 9:18 PM |
Updated: 23 Feb 2022, 9:25 PM |
Posted By: admin

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 தனது இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் வேளையில் AR ரஹ்மான், அனிருத்தின் இசை கச்சேரியை அடுத்து இசைஞானி இளையராஜாவும் இசை கச்சேரியை நிகழ்த்தவுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த அக்டோபர் 1 முதல் நடைபெற்று வரும் எக்ஸ்போவானது வரும் மார்ச் 31 ம் தேதி முடிவடையவிருக்கின்றது. இதில் ஆரம்பம் முதலே பிர்தவ்ஸ் ஆர்கெஸ்ட்ராவை வழிநடத்தும் AR ரஹ்மான் இசை கச்சேரியை நடத்தியுள்ளார்.

 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளரான அனிருத் இன்று (23.2.22) தனது இசை நிகழ்ச்சியை எக்ஸ்போவில் மிகவும் உற்சாகத்துடன் நடத்திக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இளையராஜா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் மார்ச் 5 ம் தேதி இரவு 9 மணிக்கு எக்ஸ்போவின் ஜூபிலி பார்க்கில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இசைஞானியும் வந்து எக்ஸ்போவில் இசைநிகழ்ச்சியை நடத்தவிருப்பதன் மூலம் 80s கிட்ஸ், 90s கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸின் பிடித்த இசையமைப்பாளர்கள் அனைவரும் தனது நிகழ்ச்சிகளை உலகின் மிகப்பெரிய கண்காட்சியான எக்ஸ்போவில் இசைநிகழ்ச்சியை நடத்தியதாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.