அமீரகத்தில் இன்று புதன்கிழமை காலை மூடுபனி நிலவும் என்றும் இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வலியுறுத்தியுள்ளது.
இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் காலை 9:00 மணி வரை மூடுபனி எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் இதனால் சில கடலோர மற்றும் உட்புற பகுதிகளில் கிடைமட்டத் தெரிவுநிலை (visibility) மேலும் குறையக்கூடும் என்றும் NCM தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பில் காலையில் மூடுபனியாகவும், பகல் நேரத்தில் சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று அவ்வப்போது வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.