ADVERTISEMENT

அவசரகால உதவிகளை வழங்கிய அமீரகத்திற்கு நன்றி தெரிவித்த உக்ரைன் பிரதமர்…!!

Published: 31 Mar 2022, 9:08 AM |
Updated: 31 Mar 2022, 9:36 AM |
Posted By: admin

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன், உக்ரைனின் சமீபத்திய நிலவரங்கள், ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து உரையாடியுள்ளார்.

ADVERTISEMENT

அந்த உரையாடலில் அபுதாபி பட்டத்து இளவரசர், பேச்சுவார்த்தை, உரையாடல் மற்றும் புரிந்துணர்வின் மூலம் அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் உக்ரைனில் அமைதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து “பாதிக்கப்பட்ட உக்ரேனிய குடிமக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுக்கு இடையேயான முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அரசின் வழிமுறைகள் மற்றும் அமைதிப் பேச்சுக்கள் மூலம் ரஷ்யா-உக்ரைன் போரை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதை விரைவுபடுத்த எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளையும் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து உக்ரேனிய பிரதமர் ஜெலென்ஸ்கி உக்ரேனிய குடிமக்களை அமீரகத்தில் வரவேற்று ஆதரித்ததற்கும், பிரச்சனை தொடங்கியதில் இருந்து அவர்களின் நுழைவை எளிதாக்கியதற்கும், அவசர மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கும் அமீரகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT