ADVERTISEMENT

அமீரகத்தின் மற்ற நகரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அபுதாபிக்குள் நுழைய தடை..!! அபுதாபியிலிருந்து வெளியே செல்லும் தொழிலார்களுக்கும் அனுமதி மறுப்பு..!!

Published: 13 Apr 2020, 10:35 AM |
Updated: 13 Apr 2020, 10:49 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அபுதாபி நகரை விட்டு மற்ற நகரங்களான துபாய், ஷார்ஜா போன்ற அமீரகத்தின் மற்ற பகுதிகளுக்கு சென்று வேலை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா போன்ற அபுதாபிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் மட்டுமே சென்று வேலை பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு தொழிலாளர்கள் வரவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி பொருளாதார மேம்பாட்டு துறையால் (Abudhabi Department of Economic Development, Abudhabi DED) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், கொரோனா பரவுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கும் இந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT