ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 22, 2020) :.!! பாதிக்கப்பட்டோர் 483 பேர்..!! 6 பேர் உயிரிழப்பு..!! மொத்த எண்ணிக்கை 8,238 பேர்..!!

Published: 22 Apr 2020, 1:31 PM |
Updated: 22 Apr 2020, 1:35 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 22,2020) புதிதாக 483 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 8,238 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT


புதிதாக 6 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 103 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 1,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT