ADVERTISEMENT

துபாய்: 2 புதிய பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் RTA.. 25 வழித்தடங்கள் மேம்படுத்தப்படும் எனவும் தகவல்..!!

Published: 20 Dec 2022, 6:47 PM |
Updated: 20 Dec 2022, 6:50 PM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டிசம்பர் 26 முதல் துபாயில் இரண்டு புதிய பொதுப் பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது துபாய் எமிரேட்டினுள் பேருந்து நெட்வொர்க்கின் கவரேஜை விரிவுபடுத்துவதையும், எமிரேட்டில் வெகுஜனப் போக்குவரத்து வழிமுறைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என RTA குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் புதிய வழித்தடங்கள் அறிமுகமாகும் அதே தேதியில், RTA மேலும் 25 பேருந்து வழித்தடங்களை மேம்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களின் கால அட்டவணையை மேம்படுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூட் 68

இது ஒரு வட்ட வடிவிலான பேருந்து வழித்தடமாக இருக்கும் என்றும் இந்த பாதை லெஹ்பாப் ஃபர்ஸ்ட் பார்க்கில் இருந்து தொடங்கி, மார்கம், அல்-லிசைலி மற்றும் சைஹ் அல் சலாம் வழியாக செல்லும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரூட் F62

இது ஒரு மெட்ரோ இணைப்பு பேருந்து சேவையாகும், இது நாத் அல் ஹமாரில் இருந்து பயணித்து துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மற்றும் உம் ரமூல் வழியாக எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் RTA 25 வழித்தடங்களின் கால அட்டவணையை மேம்படுத்தும். அவை:

ADVERTISEMENT

ரூட் 6, 7, 9, 20, 24, 29, 44, 81, 93, C04, E100, E101, F04, F08, F14, F26, F17, F19A, F19B, F22, F24, F23, F23A, X222, X28