ADVERTISEMENT

துபாய்: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! 12 மணி நேரம் நடக்கும் சிறப்பு மெகா விற்பனை..!!

Published: 24 Dec 2022, 5:27 PM |
Updated: 24 Dec 2022, 5:29 PM |
Posted By: admin

துபாயில் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கும் சிறப்பு விற்பனையானது  நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா விற்பனையானது இந்த ஆண்டு துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் இருக்கக்கூடிய மஜித் அல் ஃபுத்தைம் மால்களில் இந்த சிறப்பு விற்பனையானது 12 மணி நேரம் தொடர்ந்து இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 26, திங்கட்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் துபாயில் இருக்கும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்திஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மெய்செம், சிட்டி சென்டர் அல் ஷிந்தகா மற்றும் மை சிட்டி சென்டர் அல் பர்ஷா ஆகியவற்றில் ஷாப்பிங் செய்யும் போது, ​​நிறைய சலுகைகளை பெறலாம் எனவும் சில பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் அனைத்து விதமான பொருட்களை சலுகைகளுடன் பெறுவதோடு ​​1 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசு, ஒரு புதிய நிசான் பேட்ரோல் மற்றும் டவுன்டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இந்நிகழ்வுகளில் உலகப் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் ஒளி மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், ட்ரோன் நிகழ்ச்சி, மால்களில் ப்ரொமோஷன், தள்ளுபடி, பொழுதுபோக்கு மற்றும் பல புதிய சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

DSF-ன் ரேஃபிள் டிராவில் பங்குபெறும் கடைகளில் இருந்து 500 திர்ஹம் மதிப்புள்ள தங்கம், வைரம் அல்லது முத்து நகைகளை வாங்குபவர்கள் 250 கிராம் தங்கத்தை வெல்லும் வாய்ப்பை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் DSF Mega Raffle டிக்கெட் வாங்குபவர்கள் ஒரு புத்தம் புதிய Nissan Patrol வெல்லக்கூடிய வாய்ப்பைப் பெறலாம் மற்றும் DSF பங்கேற்கும் மால்களில் ஷாப்பிங் செய்பவர்கள் டிசம்பர் 15 முதல் ஜனவரி 29 வரை 200 திர்ஹம்களுக்கு மேல் ஷாப்பிங் செய்தால் 1 மில்லியன் திர்ஹம் வரை வெல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் DSF-ல் பங்குபெறும் 10 பிராண்டுகளில் இருந்து குறைந்தபட்சம் 500 திர்ஹம் செலவழித்து ஷாப்பிங் செய்பவர்கள் தினசரி டிவி, ஐபோன்கள், தங்கம் மற்றும் நகைகளை வெல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் DSF கிராண்ட் பரிசாக டவுன்டவுன் துபாயில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வெல்லும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இருபத்தைந்து அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமத்தின் குலுக்கல் முறையில் 10,000 முதல் 40,000 திர்ஹம் வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் குரைர் சென்டர், அல் பஸ்தான் சென்டர், பே அவென்யூ, செரீனா மார்க்கெட் பிளேஸ், அரேபியன் சென்டர், துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா, செஞ்சுரி மால், அல் பர்ஷா மால், அல் பர்ஷா சவுத் மால், டைம்ஸ் ஸ்கொயர் சென்டர், எதிஹாத் மால் உள்ளிட்ட DSF பங்கேற்கும் மால்களில் 200 திர்ஹம் அல்லது அதற்கு மேல் பொருட்களை வாங்கும் மக்கள் இந்த ரேஃபிளில் நுழைய தகுதியுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.