ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் உள்ள அனைத்து பார்க்குகளையும் மூட உத்தரவு..!! முனிசிபாலிட்டி அறிக்கை..!!

Published: 26 Dec 2022, 9:19 PM |
Updated: 26 Dec 2022, 9:21 PM |
Posted By: admin

அமீரகத்தில் நிலவும் தற்போதைய நிலையற்ற வானிலை காரணமாக ஷார்ஜாவில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று முதல் (டிசம்பர் 26) தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வானிலை சீரானதும் பூங்காக்கள் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என ஷார்ஜா முனிசிபாலிட்டி உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் வானிலை காரணமாக ஏற்படக்கூடிய சேதங்களை சமாளிக்க மழை தொடர்பான அவசர குழுக்கள் விழிப்புடன் உள்ளன என்றும் பொறியியல் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசகர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து கட்டுமானத் தளங்களில் பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றுமாறும் முனிசிபாலிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்கவும், வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னதாக, அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு துபாயின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT