ADVERTISEMENT

அமீரக வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஜனவரி மாத பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!!

Published: 31 Dec 2022, 9:50 AM |
Updated: 31 Dec 2022, 9:53 AM |
Posted By: admin

புத்தாண்டு துவங்கவுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த மாதம் எரிபொருள் விலையானது சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு சிறந்த புத்தாண்டு பரிசாக இந்த முறையும் எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் குழுவின் ஜனவரி மாத விலைப்பட்டியலின் படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.78 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை டிசம்பர் மாதத்தில் 3.30 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.67 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை டிசம்பர் மாதம் 3.18 திர்ஹம்சாக இருந்தது.

ADVERTISEMENT

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.59 திர்ஹம்சாக சற்று குறைக்கப்பட்டுள்ளது. இது 3.11 திர்ஹம்சாக டிசம்பர் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் டிசம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.74 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது ஜனவரி மாத விலை பட்டியலில் 3.29 திர்ஹம்சாக குறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT