ADVERTISEMENT

ஒரே இரவில் கோடீஸ்வரரான இந்திய பெண்..! மஹ்சூஸ் டிராவில் அடித்த அதிர்ஷ்டம்…

Published: 14 Apr 2023, 4:34 PM |
Updated: 14 Apr 2023, 5:09 PM |
Posted By: Menaka

கத்தார் நாட்டில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த 41 வயதான ரின்சா என்பவர் 123 வது மஹ்சூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் (ரூ.2.2 கோடி) ரேஃபிள் பரிசை வென்றதன் மூலம் ஓரே இரவில் கோடீஸ்வரராக ஆகியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக கத்தாரில் வசித்து வரும் இவர், மஹ்சூஸ் டிராவின் புதிய பரிசுக் கட்டமைப்பின் கீழ் 1 மில்லியன் திர்ஹம் பரிசை வெல்லும் இரண்டாவது பெண் மற்றும் ஐந்தாவது மில்லியனர் ஆவார்.

ADVERTISEMENT

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரின்சா மஹ்ஸூஸ் குழுவினர் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது அவரது அதிர்ஷ்டத்தை நம்பவில்லை என்றும், பின்னர் மஹ்சூஸ் எண்களை சரிபார்த்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்யும் போது மஹ்ஸூஸ் டிரா பற்றி தெரிந்துகொண்டதாகவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டிராவில் பங்கேற்கத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவரது மூத்த மகள் தற்போது பல்கலைக்கழகத்தில் சேரத் தயாராகி வருவதால், சரியான நேரத்தில் பணத்தை வென்றுள்ளதாகவும், இப்போது பணம் அவர் மகளின் படிப்பு செலவுக்கு பெரிதும் உதவும் என்றும் ரின்சா கூறியுள்ளார். இதுவரை ஒரு டிராவில் கூட வெற்றி பெற்றதில்லை என்று கூறிய ரின்சா, இந்த வெற்றியின் மூலம் மஹ்சூஸ் தனது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியதுடன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரின்சாவை தவிர அதே டிராவில் ஐந்து எண்களில் நான்கு எண்களை பொருத்திய 21 பங்கேற்பாளர்கள் இரண்டாவது பரிசான 200,000 திர்ஹம்களை ஒருவருக்கு 9,524 திர்ஹம் வீதம் அனைவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக 972 வெற்றியாளர்கள் ஐந்து எண்களில் மூன்றை பொருத்தி தலா 250 திர்ஹம் பரிசாக பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, 32868338 என்ற ரேஃபிள் ஐடியை கொண்ட ஜோஸ் என்பவர், ரமலான் தங்க ப்ரோமோஷனின் 300 கிராம் தங்க நாணயங்களை வென்று மூன்றாவது வெற்றியாளராகியுள்ளார்.

மஹ்சூஸ் டிராவில் ஏற்கனவே வழங்கப்படும் தாராளமான வாராந்திர பரிசுகளில் கூடுதலாக புனித ரமலான் மாதம் முழுவதும் வெவ்வேறு தங்கப் பரிசுகளை வெல்வதை பங்கேற்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர் அடுத்த வாரம் 400 கிராம் தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT