துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் துபாய் ஃபுட் ஃபெஸ்டிவல் அதன் பத்தாவது பதிப்பில் அடியெடுத்து வைத்துள்ளது. துபாயில் பல்வேறு வகையான உணவுகளையும் உண்டு அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் இந்த ஃபெஸ்டிவல் மே 7 வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஃபெஸ்டிவலில் பங்கேற்று பல்வேறு வகையான உணவுகள் வழங்க சுமார் 13,000 இடங்களை துபாய் கொண்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வருடம் நடைபெறும் துபாய் ஃபுட் ஃபெஸ்டிவலை போலவே, இந்த ஆண்டு பெஸ்டிவலும் பல உணவக ப்ரொமோஷன், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் சமையல் ஒர்க் ஷாப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய காஸ்ட்ரோனமிக் நிகழ்வுகள் போன்ற அற்புதமான அனுபவங்களைக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. ஃபெஸ்டிவலின் போது நீங்கள் அனுபவிக்க வேண்டிய நிகழ்வுகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
எடிசலாட் பீச் கேண்டீன்: இந்த ஆண்டு ஃபெஸ்டிவலில் பிரபலமான எடிசலாட் பீச் கேண்டீனுடன் உள்நாட்டு உணவகங்கள் மீண்டும் வருகின்றன. சன்செட் மாலுக்குப் பின்னால் 17 நாட்களும் இயங்கும் இந்த இடம் பிரபலமான கஃபேக்கள் மற்றும் உணவகங்களைக் கொண்டுள்ளது.
10 திர்ஹம் உணவுகள்: துபாய் ஃபுட் ஃபெஸ்டிவலின் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தச் சிறப்புச் சலுகையை வழங்கியுள்ளது. எனவே, நகரத்தில் உள்ள பல உணவகங்கள் தங்களுடைய கிளாசிக் மற்றும் சிக்னேச்சர் உணவுகளை வெறும் 10 திர்ஹம்களுக்கு விநியோகிக்கும்.
சமையல் ஒர்க் ஷாப்புகள்: பெரும்பாலும், சமையல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் இல்லாமல் ஃபெஸ்டிவல் முழுமையடையாது. இந்த ஆண்டு ஃபெஸ்டிவலில் உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டப்பட்ட செஃப்களுடன் பல மாஸ்டர் கிளாஸ்கள் நடத்தப்படும். மேலும் உணவைத் தயாரிக்கும் போது சிறப்பாகச் செயல்படுவது எப்படி என்பதை அறியலாம்.
துபாய் உணவக வாரம் (Dubai Restaurant Week): இது ஏப்ரல் 27 முதல் மே 8 வரை நகரத்தின் 50 சிறந்த உணவகங்களில் தள்ளுபடி விலைகளுடன் பிரத்யேக செட் மெனுக்களை வழங்கும். மேலும், இரண்டு வகை மதிய உணவு மெனுக்கள் ஒரு நபருக்கு 95 திர்ஹம்களில் தொடங்குகின்றன. அதுபோல, பல கவர்ச்சிகரமான சலுகைகளுடன் மூன்று-வகை இரவு உணவுகள் 150 திர்ஹம்களில் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.