ADVERTISEMENT

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! அபுதாபியின் முக்கிய சாலை பகுதியளவு மூடப்பட்டுள்ளதாக ITC அறிவிப்பு…

Published: 15 Sep 2023, 6:17 PM |
Updated: 15 Sep 2023, 6:38 PM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள ஒரு முக்கிய சாலை பகுதியளவு மூடப்படும் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. ITC வெளியிட்ட அறிவிப்பின் படி, அபுதாபியின் பிரதான சாலையான ஷேக் சையத் பின் சுல்தான் சாலை (E10) நேற்று (வியாழன் செப்டம்பர் 14) முதல் செப்டம்பர் 18 வரை பகுதியளவு மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், வியாழன் அன்று இரவு 10 மணிக்கு மூடப்பட்ட இடது பாதையின் பகுதி மூடல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, செப்டம்பர் 15 (வெள்ளிக்கிழமை) அன்று இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மற்ற இரண்டு இடது பாதைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சாலை மூடல் குறித்து X தளத்தில் அறிவிப்பு வெளியிட்ட ஆணையம், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.