ADVERTISEMENT

அமீரகத்தில் முடிவுக்கு வரும் கோடைகாலம்..!! இனி வெப்பம் குறையும் என வானிலை மையம் தகவல்..!!

Published: 22 Sep 2023, 9:03 PM |
Updated: 22 Sep 2023, 9:03 PM |
Posted By: Menaka

கடந்த சில மாதங்களாக கடுமையான கோடைக்காலம் ஐக்கிய அரபு அமீரகத்தை வாட்டி வதைத்து வந்த நிலையில், நாளை (செப்டம்பர் 23, சனிக்கிழமை) முதல் நாட்டில் இலையுதிர் காலம் தொடங்கும் என்றும் இதனால் அமீரகம் முழுவதும் வெப்பம் குறையும் என்றும் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ADVERTISEMENT

எனவே, அமீரகத்தின் வானிலையில் ஏற்படும் குறிப்படத்தக்க மாற்றத்தை குடியிருப்பாளர்கள் இனி உணரலாம் என கூறப்பட்டுள்ளது. அமீரகம் டிசம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கும் குளிர்காலத்தை எதிர்நோக்கி தயாராக இருக்கும் நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே குடியிருப்பாளர்களால் வெப்பநிலை மாற்றத்தை தெளிவாக உணர முடியும் என்று கூறப்படுகிறது.

வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, பகல் நேரம் மிதமான வெப்பநிலையுடன் தொடங்கும் மற்றும் இரவு நேரங்களில் படிப்படியாக குளிர்ச்சியடையும்.

ADVERTISEMENT

தற்பொழுது, அமீரகம் அதன் இரண்டாவது இடைநிலைக் காலகட்டத்திற்குள் நுழைவதாக, அதாவது கோடை மற்றும் குளிர்காலத்திற்கு இடையிலான கட்டத்தில் இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய இடைப்பட்ட காலம், வானிலையின் விரைவான மற்றும் கவனிக்கத்தக்க மாற்றங்களால் குறிக்கப்படுகிறது.

அந்த வகையில், டிசம்பர் 21 ஆம் தேதிக்குள் இலையுதிர்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் என்பதால், இந்த காலநிலை மாற்றம் கவனிக்கத்தக்கதாக இருக்கும் என்று குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT