ADVERTISEMENT

அபுதாபி: மிலாது நபியை முன்னிட்டு இலவச பார்க்கிங்.. டோல்கேட் கட்டணத்தில் விலக்கு.. அறிவிப்பை வெளியிட்ட ITC!!

Published: 27 Sep 2023, 6:41 PM |
Updated: 27 Sep 2023, 6:41 PM |
Posted By: Menaka

நாளை மறுநாள் வரவிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 29 அன்று பொது விடுமுறை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, பொது விடுமுறை நாளில் அபுதாபியில் இலவச பார்க்கிங் மற்றும் இலவச டோல் கேட் வசதியை வழங்குவதாக அபுதாபி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில், பொது விடுமுறையன்று கிடைக்கக்கூடிய இலவச பார்க்கிங் மற்றும் டோல் கேட்டுக்கான நேரங்களையும், பொது பேருந்து நேரங்களையும் அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி, வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை 7:59 மணி வரை விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம். அதுபோல, முசாஃபா M-18 டிரக் பார்க்கிங் இடங்கள் அதிகாரப்பூர்வ விடுமுறையின் போது இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு ITC வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை குடியிருப்புகளில் (Residence Parking) வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கவும், பார்க்கிங்கிற்கு நியமிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை சரியாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று வெள்ளிக்கிழமையன்று, வாகன ஓட்டிகள் அபுதாபியில் உள்ள டார்ப் டோல் கேட் (Darb toll gate) அமைப்பை இலவசமாக அணுகலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்தநாளான சனிக்கிழமையன்று மீண்டும் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், அபுதாபி எமிரேட் முழுவதும் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் விடுமுறையின் போது மூடப்படும் என்று ITC தெரிவித்துள்ளது. எனவே, குடியிருப்பாளர்கள் https://www.itc.gov.ae/ என்ற ITCயின் இணையதளம், TAMM இயங்குதளம், Darb மற்றும் Darbi ஸ்மார்ட் ஆப்ஸ் மூலம் ITC இன் சேவைகளைப் பெறலாம் எனவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அபுதாபியில் வார இறுதி நாட்கள் மற்றும் உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களில் பொது பேருந்து சேவைகள் வழக்கமான அட்டவணையின் அடிப்படையில் செயல்படும் எனவும் ITC அறிவித்துள்ளது.