ADVERTISEMENT

தூய்மைப் பணியாளரின் தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட துபாயின் மிகப்பெரிய பில்லியனர்.. சமூக ஊடகங்களில் வைரல்.. யார் இவர்னு தெரியுமா.!!

Published: 9 Oct 2023, 3:54 PM |
Updated: 9 Oct 2023, 4:23 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய பில்லியனரும், துபாயின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமும், புர்ஜ் கலீஃபா, துபாய் மால் ஆகியவற்றின் தாய் நிறுவனமுமான எமாரின் (Emaar) நிறுவனர் முகம்மது அல்அப்பார் (Mohammed Alabbar) அவர்கள், துபாய் மாலில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும் முகமது ஆரிஃப் என்ற நபருடன் சாதாரணமாக தோளோடு தோள் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

துபாய் மாலில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்ததுடன், துபாய் மால் அழகியல் தோற்றத்தில் காட்சியளிப்பதற்கும் தூசிகள் இன்றி மிளிர்வதற்கும் ஆரிஃப் போன்றவர்கள் தான் காரணம் என்றும் புகழுரையை பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மிகப்பெரிய பில்லியனரான அல் அப்பாரின் இந்த சமூக ஊடக பதிவு, மால்கள் மற்றும் பொது வசதிகளை தூய்மையானதாக வைத்திருக்க 24 மணி நேரமும் உழைக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு புகழுரையாக உள்ளதாக அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

துபாயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தொழிலாளர்களின் முயற்சிகளை அல் அப்பார் பாராட்டுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த ரமலான் மாதத்தில் இப்தாரின் போது நண்பகலில் பணிபுரிந்த டெலிவரி ரைடர்களையும் வெகுவாக பாராட்டியும் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, அவர்களின் இந்த செயல்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக டெலிவரி ரைடராகவும் உடையணிந்து, டவுன்டவுன் துபாய் முழுவதும் மினிட்ஸ் பைக்கை ஓட்டி, டெலிவரி ரைடர்களின் அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தூய்மைப் பணியாளரின் தோளில் கை போட்டு சாதாரண நபர்களில் ஒருவராக நடந்து கொண்ட அவரின் விதத்தை பலரும் பாராட்டியதுடன் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

துபாயை தளமாக கொண்டு இயங்கி வரும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான Emaar நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான மதிப்பீட்டின் படி 16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($16.8 Billion) ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp channel