ADVERTISEMENT

அமீரகத்தில் தனியார் ட்யூஷன் எடுக்கும் நபர்களுக்கான புதிய பணி அனுமதி அறிமுகம்!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..??

Published: 19 Dec 2023, 6:01 PM |
Updated: 19 Dec 2023, 6:06 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே மாணவர்களுக்கு தனிப்பட்ட பாடங்கள் நடத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக, தனியார் ஆசிரியர்களுக்கான புதிய பணி அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி அனுமதி தகுதி வாய்ந்த நபர்கள் பள்ளிகளுக்கு வெளியே, மாணவர்களுக்கு தனித்தனியாக அல்லது குழுக்களாக தனிப்பட்ட பாடங்களை எடுக்க அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

இந்த பணி அனுமதிக்கு அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வேலையில்லாத தனிநபர்கள், 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

MoHRE மற்றும் கல்வி அமைச்சகம் (MoE) இணைந்து தொடங்கப்பட்ட இந்த அனுமதியானது சட்டவிரோதமான தனியார் கல்விக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனியார் ஆசிரியர் உரிமத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் (MoHRE) டிஜிட்டல் தளங்கள் மூலம் அனுமதிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். அமைச்சகத்தின் இணையதளத்தில், ‘Services’ என்ற விருப்பத்தின் கீழ் ‘Private Teacher Work Permit’ என்ற தேர்வைக் காணலாம்.

செல்லுபடியாகும் காலம்:

பயனர்கள் இரண்டு வருட பணி அனுமதியை இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் “இது தகுதியான நபர்கள் பணி அனுமதி பெற அனுமதிக்கிறது, அவர்கள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘நடத்தை நெறிமுறை’ ஆவணத்தில் கையொப்பமிட்டால், தனிப்பட்ட பாடங்களை வழங்குவதற்கும் நேரடி வருமானத்தை ஈட்டுவதற்கும் அனுமதி பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்” என்று MoHRE கூறியுள்ளது.

ADVERTISEMENT

MOHREயின் அனுமதியின்றி தனிப்பட்ட பாடங்களை நடத்துபவர்கள் அபராதம் மற்றும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அபராதத் தொகையையோ அல்லது அபராதம் குறித்த விவரத்தையோ அமைச்சகம் குறிப்பிடவில்லை.

உரிமம் ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி இரண்டுக்கும் அனுமதி அளிக்குமா?

ஆம், ஒரே உரிமம் இரண்டிற்கும் அனுமதியளிக்கிறது.

பயிற்றுவிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு உள்ளதா?

இல்லை.

அனுமதி வழங்க எவ்வளவு நேரம் ஆகும்?

MOHREயின் கூற்றுப்படி,  ஒன்று முதல் ஐந்து வேலை நாட்கள் வரை ஆகும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

விண்ணப்பதாரர் ஆறு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

அனுமதிக்கு யார் விண்ணப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தேவைகள் மாறுபடும்.

பொதுவாக தேவைப்படக்கூடிய ஆவணங்கள்:

  • செல்லுபடியாகும் UAE ரெசிடென்ஸி (பாஸ்போர்ட்/எமிரேட்ஸ் ஐடி)
  • கையெழுத்திட்ட டிக்லரேஷன்
  • நல்ல நடத்தைக்கான சான்றிதழ்
  • முதலாளியிடமிருந்து தடையில்லா சான்றிதழ்
  • பாதுகாவலரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (தனியார் ட்யூஷன் வழங்க விரும்பும் மாணவர்களுக்கு)
  • அனுபவச் சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்)
  • வெள்ளை பின்னணி கொண்ட புகைப்படம்

அனுமதி ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?

கல்வி அமைச்சின் கல்வி விவகாரங்களுக்கான துணைச் செயலர் டாக்டர் முஹம்மது பின் இப்ராஹிம் அல் முஅல்லா என்பவர் பேசுகையில், “இந்த அனுமதி கல்விச் செயல்பாட்டில் ஒழுக்கம், தரம் மற்றும் செயல்திறனைப் பேணுகையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நெகிழ்வான விருப்பங்களை வழங்குகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், தனியார் ஆசிரியர்களை பணியமர்த்தும்போது சட்டவிரோதமான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத நடைமுறைகளை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தேசிய அளவில் தனியார் பாடங்களை ஒழுங்குபடுத்துவதுடன் தனியார் ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது மற்றும் மாணவர்கள் தங்கள் கற்றல் பாணி மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துணைக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel