ADVERTISEMENT

VBM : 6 -ம் கட்டத்தில் சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம் அறிவிப்பு..!!

Published: 28 Aug 2020, 11:12 AM |
Updated: 28 Aug 2020, 11:24 AM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை சவூதி அரேபியாவில் இருக்கக்கூடிய இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படும் என ஏற்கெனவே இந்திய அரசு அறிவித்திருந்தது. அதனையொட்டி, தற்பொழுது செப்டம்பர் 1 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை சவுதியில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய தூதரகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள பட்டியலில்,7 விமானங்கள் இந்தியாவிற்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விமானம் மட்டும் வரும் செப்டம்பர் 2 ம் தேதி சவூதி அரேபியாவில் இருக்கும் ரியாத்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவிற்கு செல்ல வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள், செப்டம்பர் 2 ம் தேதி இண்டிகோ விமானம் மூலம் ரியாத்தில் இருந்து சென்னை செல்ல விருப்பமிருந்தால் விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று விமான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. எனினும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT