ADVERTISEMENT

விமான முன்பதிவு செய்த நாளில் பயணிக்காதவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய தகவல்..!!

Published: 6 Sep 2020, 8:09 AM |
Updated: 6 Sep 2020, 8:21 AM |
Posted By: admin

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்து, பின்னர் முன்பதிவு செய்த நாளில் பயணிக்காமலும் அந்த விமான டிக்கெட்டை கேன்செல் செய்யாமலும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தற்பொழுது தங்களின் பயண தேதியை அடுத்த வருடம் (2021) டிசம்பர் 31 ம் தேதிக்குள் எந்த தேதியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொண்டு பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்த முன்பதிவை மாற்றியமைக்கும் முறையானது இந்திய அரசு மேற்கொள்ளும் வந்தே பாரத் விமானங்களும் பொருந்தும் என்றும் விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தங்களின் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் வைத்திருக்கும் நபர்களுக்கே இது பொருந்தும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும், பயண தேதியை மாற்றுவதற்கு இனிமேல் வரக்கூடிய நாட்களில் முன்பதிவு செய்தவர்கள் ஆன்லைனிலேயே மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஏற்கெனவே கடந்த கால நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்து அதனை கேன்சல் செய்யாமல் இருக்கும் நபர்கள் தங்களின் பயண தேதியை மாற்றிக்கொள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்தையோ அல்லது கால் சென்டெரையோ தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்திய அரசு மேற்கொள்ளும் வந்தே பாரத் திட்டத்தின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பெரும்பாலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT