ADVERTISEMENT

சவூதி : அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ‘National Day’ விடுமுறை அறிவிப்பு..!!

Published: 9 Sep 2020, 9:02 AM |
Updated: 9 Sep 2020, 9:02 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் “National Day” விமரிசையாக கொண்டாடப்படும். அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. தற்பொழுது இந்த வருடத்திற்கான “National Day” விடுமுறை சவுதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சகம் அறிவித்துள்ளதன்படி, சவூதி அரேபியாவில் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும், தனியார் துறைக்கு செப்டம்பர் 23 புதன்கிழமை ஒரு நாள் மட்டும் National Day விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT