ADVERTISEMENT

UAE-2025: புத்தாண்டிற்கு மிக நீண்ட வானவேடிக்கை மற்றும் லேசர் ட்ரோன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள எமிரேட்!!

Published: 17 Dec 2024, 6:21 PM |
Updated: 17 Dec 2024, 6:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புத்தாண்டு (NYE) கொண்டாட்டத்திற்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், ராஸ் அல் கைமாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் மிக நீண்ட புத்தாண்டு வானவேடிக்கை மற்றும் லேசர் ட்ரோன் நிகழ்சிகள் மூலம் புத்தாண்டு இரவு அன்று வானத்தை ஒளிரச் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவில் நடத்தப்படவிருக்கும் 15 நிமிட சிறப்பு காட்சி மூலம் மேலும் உலக சாதனைகளை அமைப்பதை எமிரேட் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரத்யேக பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்கள் NYE பெஸ்டிவலை இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவல்களின் படி, இந்தாண்டு ட்ரோன் கலைத்திறனை கிரியேட்டிவ் லேசர் தொழில்நுட்பத்துடன் இணைத்து, ‘Our Story in the Sky’ என்ற கருப்பொருளில் வானத்தில் ராஸ் அல் கைமாவின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமான அடையாளங்கள் ட்ரோன்களால் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மர்ஜன் ஐலேண்டில் இருந்து அல் ஹம்ரா வில்லேஜ் வரை நீண்டு செல்லும் வாட்டர்ஃபிரண்ட்டிற்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ட்ரோன் காட்சிகளுக்காக SKYMAGIC மற்றும் பைரோடெக்னிக் காட்சிகளுக்காக Grucci  ஆகிய நிறுவனங்களை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, நேரடி இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு செயல்பாடுகள் மற்றும் உணவு டிரக்குகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 20,000 வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய ஆறு நியமிக்கப்பட்ட இலவச பார்க்கிங் மண்டலங்கள் தளத்தில் உள்ளன. பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை ஆன்லைனில் முன் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இவை தவிர, ராம்ஸ் பார்க்கிங்கில், இலவச BBQ வசதிகள் மற்றும் நியமிக்கப்பட்ட முகாம் பகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தயா பார்க்கிங் மண்டலத்தில் கேரவன்கள், RVக்கள் மற்றும் கூடாரங்களும் இரவில் அமைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, RAK இன் NYE நிகழ்ச்சி இரண்டு கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel