ஓமானில் இன்று (அக்டோபர் 12, 2020) புதிதாக 685 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஓமானில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 106,675 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், புதிதாக 8 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,046 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 93,222 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.