ADVERTISEMENT

UAE: ஜனவரி 1 முதல் மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய நம்பர் பிளேட்..!! அபுதாபியின் புதிய அறிவிப்பு.!!!

Published: 27 Dec 2024, 4:51 PM |
Updated: 27 Dec 2024, 4:58 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் வருகின்ற ஜனவரி 1, 2025 முதல் வணிக மோட்டார் சைக்கிள்களுக்கு (commercial motorcycle) புதிய வகை லைசென்ஸ் ப்ளேட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக, அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்(ITC) (AD Mobility) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இனி வணிக மோட்டார் சைக்கிள்களுக்கு மஞ்சள் தகடுகள் (yellow number plate) பயன்படுத்தப்படும், அதேநேரத்தில் தனிப்பட்ட சைக்கிள்களுக்கு சிவப்பு தகடுகள் (red number plate) இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், உரிமையாளர்கள் தங்கள் உரிமையின் காலாவதியின் (ownership expiry) போது, அல்லது நம்பர் ப்ளேட்டை மாற்றும்போது அல்லது அதன் எண்ணை மாற்றும்போது தற்பொழுது அறிவித்துள்ளதன் அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று AD மொபிலிட்டி வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த முயற்சி அபுதாபியில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT