ADVERTISEMENT

ஓமான் திரும்பும் பயணிகள் டிக்கெட் முன்பதிவிற்கு முன் பயண வரலாற்றை தெரிவிக்க வேண்டும்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

Published: 14 Oct 2020, 3:16 PM |
Updated: 14 Oct 2020, 3:16 PM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து ஓமான் திரும்பவிருக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான முறையில் ஓமானிற்கு திரும்பி வர தங்களின் சமீப கால பயண வரலாற்றை பற்றிய விபரங்களை டிக்கெட் முன்பதிவிற்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஓமான் திரும்பும் குடியிருப்பாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் நினைவுபடுத்தியுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள நடைமுறைகள்:

ADVERTISEMENT
  • ஓமான் குடிமக்கள் மற்றும் செல்லுபடியாகும் ரெசிடென்ட் பெர்மிட் வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் முன் அனுமதியின்றி ஓமான் நாட்டிற்குள் நுழையலாம்.
  • 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் செல்லுபடியாகும் இ- விசா வைத்திருப்பவர்கள் ஓமானிற்குள் நுழையலாம்.
  • பயணிகள் ஓமான் நுழைவதற்கு முன் Tarassud+ அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும்
  • ஓமான் திரும்பும் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் ஓமான் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனைக்காக பயணிகள் 25 ஓமான் ரியால்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT