ADVERTISEMENT

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கும் மீலாது நபியை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு..!!

Published: 25 Oct 2020, 3:39 PM |
Updated: 25 Oct 2020, 3:39 PM |
Posted By: admin

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமை அமீரகத்தின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அமீரகத்தின் அரசு மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், இதன் மூலம், பொதுத்துறை ஊழியர்களுக்கு இம்மாத இறுதியில் வியாழன், வெள்ளி, சனி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்றும் நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல் ஊழியர்கள் மீண்டும் தங்களின் பணிக்குத் திரும்பலாம் என்றும் மத்திய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

தற்பொழுது அமீரகத்தில் தனியார்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் 29-ம் தேதி மீலாது நபியை முன்னிட்டு ஒரு நாள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மனித வள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால், தனியார்துறை ஊழியர்களுக்கு இந்த வார இறுதியில் தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறையும், சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT