ADVERTISEMENT

200க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 80% வரை தள்ளுபடி..!! துபாய் WTC-ல் தீபாவளிக்கான அதிரடி விற்பனை..!!

Published: 26 Oct 2020, 11:58 AM |
Updated: 26 Oct 2020, 12:03 PM |
Posted By: admin

துபாயில் உள்ள CBBC-யில் ஐந்து நாட்கள் நடக்க இருக்கும் மாபெரும் விற்பனைக் கண்காட்சியானது தொடங்கவுள்ளது. துபாய் வேர்ல்ட் ட்ரேடு சென்டரில் இந்த அதிரடி தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் ஒரே இடத்தில் 200 க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மாபெரும் தள்ளுபடி விற்பனையானது வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 2 வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (Hall 5 & 6) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் பங்கேற்கும் பிராண்டுகளில் குஸ்ஸி (Gucci), வெர்சேஸ் (Versace), பாஸ் (Boss), சி.கே (CK), கெஸ் (Guess), ஸ்பிளாஸ் (Splash), ரால்ப் லாரன் (Ralph Lauren), பப்லோஸ்கி (Pablosky), ஸ்டீவ் மேடன் (Steve Madden), டிசிகுவல் (Desigual), ஈக்கோ (Ecco), அய்னர் (Aigner), அடிடாஸ் (Adidas), லாகோஸ்ட் (Lacoste), ஆக்ஸிலி (Oxxily), ரே-பான் (Ray-Ban), போலீஸ் (Police) மற்றும் இது போன்ற பல பிரபல ப்ராண்ட்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

CBBC-யானது எப்போதும் பிரீமியம் பிராண்டுகளை ஷாப்பிங் செய்வதற்கான ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது. மேலும், வேறு எங்கும் கிடைக்காத விலைகளில் இங்கு பல முக்கிய பிராண்டுகளின் பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். கூடுதலாக, இங்கு ஷாப்பிங் செய்ய நுழைவுக் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம் என்பதும் இலவசப்பரிசு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.