ADVERTISEMENT

அபுதாபி: மயிரிழையில் உயிர்தப்பிய நபர்.. வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தியதால் நிகழ்ந்த சம்பவம்.. எச்சரிக்கும் காவல்துறை..!!

Published: 8 Mar 2025, 8:16 AM |
Updated: 8 Mar 2025, 8:41 AM |
Posted By: Menaka

அபுதாபி காவல்துறை அவ்வப்போது சாலைகளில் வாகன ஓட்டிகள் புரியும் தவறுகளையும் சாலை விபத்துகள் குறித்தும் தனது சமூக ஊடக வலைதளத்தில் பதிவிட்டு வரும். அந்த வரிசையில் காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளனர். அதில் நான்கு வழிச் சாலையில் அதிர்ச்சியூட்டும் சாலை விபத்தைக் காட்டும் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்து, சாலையின் நடுவில் தற்செயலாக நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகளால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு கார் இடதுபுறப் பாதையில் நிற்கும் போது, மற்றொரு வாகனம் அதன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விபத்து ஏற்படும் போது ஒரு நபர் காரின் பானட்டை மூடுவதைக் காணலாம், இதனால் சேதம் தவிர்க்கப்படுகிறது. விபத்தின் தாக்கத்தால் கார் திடீரென நகர்ந்து, அதன் பாகங்கள் கழன்று விழுகின்றன. காரின் பானட்டை மூடிய நபர் இந்த விபத்தின்போது மயிரிழையில் உயிர்தப்பியிருக்கிறார்.

வீடியோவின் தொடக்கத்தில், வாகனம் ஓட்டும்போது காரின் ஒரு பகுதி கழன்று விழுவதைக் காணலாம், அதன் பிறகு வாகனம் சாலையின் நடுவில் நிற்கிறது. இந்த விபத்தால் மற்ற ஓட்டுநர்கள் விரைவாக பாதைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, இது சாலையில் உள்ள நான்கு பாதைகளில் கிட்டத்தட்ட மூன்றைப் பாதிக்கிறது.

ADVERTISEMENT

இது போன்ற சூழ்நிலைகளில், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விபத்துகளைத் தவிர்ப்பதற்கும், அருகிலுள்ள எக்ஸிட் பகுதிக்கு செல்லுமாறும், சாலையின் நடுவில் நிறுத்த வேண்டாம் என்றும் வாகன ஓட்டிகள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

சாலையில் நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு ப்ளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படலாம். கூடுதலாக, மத்திய போக்குவரத்து மற்றும் சாலைகள் சட்டத்தின் பிரிவு 70இன் படி, போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றாத ஓட்டுநர்களுக்கு திர்ஹம்ஸ் 500 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel