ADVERTISEMENT

வானவேடிக்கை, லேசர் ஷோ, கலை நிகழ்ச்சிகளுடன் தீபாவளியை கொண்டாட தயாராகும் துபாய்..!!

Published: 1 Nov 2020, 5:36 PM |
Updated: 1 Nov 2020, 7:04 PM |
Posted By: admin

நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்திய திருவிழாவான தீபாவளியை முன்னிட்டு துபாய் நகரில் பாலிவுட் நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், தங்கம் மற்றும் நகைக்கடைகளில் ப்ரோமோஷன்ஸ் உள்ளிட்ட நிகழ்வுகளை துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் DFRE வால் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற பல நிகழ்வுகளால் வண்ணம், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியுடன் துபாய் நகரிலும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT

DFRE யின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா கூறுகையில், “துபாயின் பாரம்பரிய தீபாவளி கொண்டாட்டங்கள் குடும்பத்தை மையமாகக் கொண்ட வேடிக்கைகளுடன் பிரபஞ்ச அழகைக் கவரும். இந்த ஆண்டு பல சிறந்த ப்ரோமோஷன்ஸ், செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் பண்டிகை காலத்தைத் தொடங்குவதற்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் முதன்மையான மற்றும் துபாயின் புகழ்பெற்ற அந்தஸ்தைக் காண்பிப்பதற்கான சரியான நிகழ்வு தீபாவளி” என்று கூறியுள்ளார்.

ஒளி மற்றும் லேசர் காட்சிகள்…

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் தனது சாதனை படைத்த இமேஜின் நிகழ்ச்சியின் மூலம் இரண்டு பாலிவுட் நிகழ்ச்சிகளை வழங்கும். இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 6 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில் ஒரு குழந்தை யானையின் கதையைச் சொல்லும் ‘ஹாத்தி கார்டன்’ நிகழ்ச்சியும், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாப் பாடல் நிகழ்ச்சியும் இடம்பெறும்.

ADVERTISEMENT
வான வேடிக்கை மற்றும் வாட்டர் பவுண்டைன் ஷோ…

துபாயின் பாம் ஜூமைராவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நடன நீரூற்றான ‘தி பாம் நீரூற்றில்’ நவம்பர் 13 ஆம் தேதி அன்று ஒரு வான வேடிக்கை நிகழ்ச்சி மற்றும் நடன நீரூற்று நிகழ்ச்சி நடைபெறும்.

பாலிவுட் நிகழ்ச்சிகள்…

நவம்பர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை ‘அல் சீஃப்’அரங்கின் திறந்தவெளி மேடை பகுதியில் சிறப்பு பாலிவுட் நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ADVERTISEMENT
தங்கம் மற்றும் நகைக்கடைகளில் ப்ரோமோஷன்ஸ் மற்றும் குழுக்கள் பரிசுகள்…

துபாய் தங்கம் மற்றும் நகைக் குழு (DGJG) நவம்பர் 1 மற்றும் நவம்பர் 21 தேதிகளுக்கு இடையில் பங்கேற்கும் தங்க நகைக்கடைகளில் சிறப்பு ப்ரோமோஷன்களை வழங்கும். 500 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் நகைகள் வாங்கிய வாடிக்கையாளர்கள் பங்குபெறும் ஒரு டிராவில் வெற்றிபெறும் 10 பேருக்கு தலா 10000 திர்ஹம்ஸ் மதிப்பிலான ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் வைர மற்றும் விலைமதிப்பற்ற நகைகளை வாங்கும்போது அவர்களுக்கு இலவச பரிசுகளையும் DGJG வழங்கவுள்ளது.