ADVERTISEMENT

ஷார்ஜாவிலிருந்து கொர்ஃபக்கான் செல்லும் சாலையில் 5 புதிய ரேடார்கள்..!! ஷார்ஜா போலீசார் தகவல்..!!

Published: 2 Nov 2020, 5:24 PM |
Updated: 2 Nov 2020, 5:24 PM |
Posted By: admin

ஷார்ஜாவின் ஷீஸ் பகுதியிலிருந்து கொர்ஃபக்கான் செல்லும் சாலையில் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் ஐந்து புதிய போக்குவரத்து ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ரேடார்கள் இன்று நவம்பர் 2 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் ஷார்ஜா போலீசாரால் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஷார்ஜாவிலிருந்து கொர்ஃபக்கான் செல்லும் இந்த குறிப்பிட்ட சாலையில் சமீபத்தில் பல வாகன ஓட்டிகள் வேகமாக வானங்களை செலுத்தும் சம்பவங்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய ரேடார்கள் நிறுவப்பட்டிருப்பதாக ஷார்ஜா போலீசார் கூறியுள்ளனர்.

நெடுஞ்சாலையின் இருபுறமும் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களை கண்டறியவும் மற்றும் இந்த குறிப்பிட்ட சாலையை பயன்படுத்த அனுமதிக்கப்படாத லாரிகள் மற்றும் பிற வாகனங்களை பிடிக்கவும் இந்த ரேடார்கள் உதவும் என்றுஷார்ஜா போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை இயக்குநர் லெப்டினன்ட் கலோனல் முகமது அலாய் அல் நக்பி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் இந்த ஷீஸ் முதல் கொர்ஃபக்கான் வரை செல்லும் சாலையில், 80 கி.மீ மற்றும் 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க இரண்டு வேக வரம்புகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் லெப்டினென்ட் கலோனல் அல் நக்பி குறிப்பிட்டுள்ளார்.