ADVERTISEMENT

துபாயில் 100 க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் கைது.. 50,000 திர்ஹம்ஸ் பறிமுதல்..!!

Published: 21 Mar 2025, 5:48 PM |
Updated: 21 Mar 2025, 7:55 PM |
Posted By: Menaka

துபாயில் பிச்சை எடுப்பதை தடுப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ரமலானின் முதல் பாதியில் சுமார் 127 பிச்சைக்காரர்களைக் கைது செய்து, அவர்களிடம் இருந்த 50,000 திர்ஹம்ஸ் பணத்தை பறிமுதல் செய்ததாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்ட அறிக்கியின் படி, “Fight Begging” என்ற தலைப்பில் நடந்து வரும் பிரச்சாரமானது, நாட்டின் நாகரீக பிம்பத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் காவல்துறை பிச்சை எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது, இதன் விளைவாக ரமலானின் முதல் பாதியில் 120 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல, பிச்சை எடுப்பதை எதிர்த்துப் போராட துபாய் காவல்துறை ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவதாக சந்தேக நபர்கள் மற்றும் குற்றவியல் நிகழ்வுத் துறையின் துணை இயக்குநர் கர்னல் அகமது அல் அதிதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிச்சை எடுப்பது சமூகத்தின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பிம்பத்தையும் சிதைக்கிறது. இது பெரும்பாலும் திருட்டு, பிக்பாக்கெட் திருட்டு மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களை சுரண்டுவது போன்ற பிற குற்றங்களுடன் தொடர்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

ஆகவே, பிச்சை எடுப்பது என்ற போர்வையில் பிச்சை எடுப்பவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, உண்மையான தேவை உள்ளவர்களை நன்கொடைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு பங்களிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர்.

மேலும், பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரிவின் தலைவர் கேப்டன் அப்துல்லா காமிஸ், பிச்சை எடுப்பவர்களின் தோற்றத்தை நம்பி பரிதாபத்துடனும் இரக்கத்துடனும் நடத்தாதீர்கள் என்று குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

எனவே பிச்சைக்காரர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற எந்தவொரு செயலையும் துபாய் காவல்துறைக்கு அவர்களின் கால் சென்டர் (901) அல்லது துபாய் காவல்துறை செயலியில் உள்ள “Police Eye” சேவை மூலம் தெரிவிக்குமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel