ADVERTISEMENT

ஜகாத் அல்-ஃபித்ரை உணவாக அல்லது ரொக்கமாக செலுத்தலாம்.. அமீ்ரக ஃபத்வா கவுன்சில் அறிவிப்பு.. விபரங்கள் இங்கே..!!

Published: 28 Mar 2025, 8:26 AM |
Updated: 28 Mar 2025, 8:26 AM |
Posted By: Menaka

ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டுக்கான ரமலான் மாதத்தில் ஜகாத் அல்-ஃபித்ரை ரொக்கமாக செலுத்துவது அனுமதிக்கப்படுகிறது என்பதை ஐக்கிய அரபு அமீரக ஃபத்வா கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, இந்த ரமலானில் ஜகாத் தொகையை பணமாக செலுத்தலாம். மேலும், ஜகாத் தொகைக்கான மதிப்பு ஒரு நபருக்கு 25 திர்ஹம் என கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

ஏழைகளுக்கு ஜகாத் அல்-ஃபித்ர் கொடுப்பது என்பது இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். இது தனக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், சார்ந்திருப்பவர்களுக்கும் சார்பாக ஈத் பண்டிகைக்கு முன்பாக செலுத்தப்பட வேண்டும் என்றும் அமீரகத்தின் ஃபத்வா கவுன்சில் கூறியுள்ளது.

மேலும், ஜகாத்தை ஒரு நபருக்கு 2.5 கிலோ அரிசி போன்ற உணவாகவோ அல்லது ஒரு நபருக்கு 25 திர்ஹம் என ரொக்கமாகவோ வழங்கலாம் என்பதையும் கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன், இந்த ரமலான் மாதத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் நோன்பு நோற்கத் தவறிய நபர்களுக்கான பரிகாரத் தொகைகளையும் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

ஏழைகளுக்கு உதவுவதையும், அவர்கள் ஈத் பண்டிகை தினத்தன்று பிறரிடம் யாகசம் கேட்பதிலிருந்து சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்வதையும் ஜகாத் அல் ஃபித்ர் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமீரக அரசு ஏழைகளின் உடனடித் தேவைகளை சிறப்பாக நிவர்த்தி செய்வதால், உணவுக்குப் பதிலாக ரொக்கமாக பணம் செலுத்துவது உணவு மற்றும் உடை போன்ற தங்களுக்குத் தேவையானதை வாங்க ஏழைகளை அனுமதிக்கும் எனவும் ஃபத்வா கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

நடவடிக்கைக்கான அழைப்பு:

ஜகாத் அல் ஃபித்ரை உணவாக அல்லது ரொக்கமாக செலுத்த விரும்புவோர், சரியான நேரத்தில் செலுத்துமாறு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இது ஈத் பண்டிகைக்கு முன்பு ஏழைகளைச் சென்றடைவதை உறுதி செய்கிறது. முறையான விநியோகத்தை உறுதி செய்ய இஸ்லாமிய விவகாரங்கள், அறக்கட்டளைகள், ஜகாத் நிதி அல்லது தொண்டு நிறுவனங்களின் பொது அதிகாரசபையைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel