ADVERTISEMENT

ஷார்ஜாவில் முக்கிய எக்ஸிட் பாதை தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு!!

Published: 17 Apr 2025, 7:40 PM |
Updated: 17 Apr 2025, 7:44 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), எமிரேட்டில் நடந்து வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக ஒரு முக்கிய எக்ஸிட் பாதை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஆணையம் X தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஷார்ஜா-அல் தைத் சாலையில் உள்ள அல் தைத் நகரத்திற்குச் செல்லும் எக்ஸிட் பாதையான – பிரிட்ஜ் நம்பர்.4 ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 21 திங்கள் வரை என நான்கு நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆகையால், இந்த காலகட்டத்தில் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், அவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து போக்குவரத்து பாதுகாப்பு அறிகுறிகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

மூடப்படும் பாதையின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Photo: RTA Sharjah

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel