ADVERTISEMENT

UAE: 10 ஆண்டுகளுக்கும் மேலான போக்குவரத்து அபராதங்களைத் தள்ளுபடி செய்யும் எமிரேட்!! முக்கிய நிபந்தனைகள் வெளியீடு…

Published: 22 Apr 2025, 4:35 PM |
Updated: 22 Apr 2025, 4:35 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா எமிரேட்டானது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களை, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்வதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஷார்ஜாவில் போக்குவரத்து அபராதம் பெற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவின் துணை ஆட்சியாளரும் ஷார்ஜா நிர்வாகக் கவுன்சிலின் (SEC-Sharjah Executive Council) துணைத் தலைவருமான ஷேக் அப்துல்லா பின் சலீம் அல் காசிமி தலைமையில் இன்று ஏப்ரல் 22, செவ்வாயன்று நடைபெற்ற ஷார்ஜா நிர்வாகக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

எனவே இந்த புதிய முடிவின்படி, ஷார்ஜா காவல்துறை பொது கட்டளையில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரியால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட எந்தவொரு போக்குவரத்து மீறலும் தானாகவே கைவிடப்படும் என தெரிகிறது. எனினும் இந்த அபராத தள்ளுபடியை பெறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த அபராதத் தள்ளுபடிக்கு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்க, வாகன ஓட்டிகள் 1,000 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், பின்வரும் சந்தர்ப்பங்களில் கட்டணத்திலிருந்து விலக்குகள் உள்ளன:

  • வாகன உரிமையாளர் இறந்துவிட்டால் (சரிபார்க்கப்படும்)
  • வாகன உரிமையாளர் குறைந்தது 10 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே இருந்தால்
  • வாகனம் கைவிடப்பட்டிருந்தால், மேலும் உரிமையாளரைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால்

இந்த முயற்சி வாகன உரிமையாளர்கள், குறிப்பாக பழைய தீர்க்கப்படாத அபராதங்களைக் கொண்டவர்கள் மீதான சுமையைக் குறைப்பதையும், காலாவதியான பதிவுகளைச் சுத்தம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் செயல்படுத்தலுக்கான காலக்கெடு குறித்த கூடுதல் விவரங்கள், வரும் நாட்களில் ஷார்ஜா காவல்துறையால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel